Pages

Friday, September 14, 2012

இணையத்தில் வாங்கும் பொருள் வாங்கிய நாளிலேயே கையில் கிடைக்கப் போகிறது


வேகமான மற்றும் விலை குறைவான இணைய சேவையும், பண பரிவர்த்னைகளை எளிதாக்கிய இணையதளங்கலும் நம்மில் பலரையும் இணையம் வழியாக பொருள்களை வாங்க வழி வகை செய்துள்ளன. இன்றும் பலர் eBay வழியாக வாங்கும்போது… “இவன் பிராடா இல்லையா.. ஒழுங்கா செல்போன் வருமா இல்ல; செங்கல் பார்சல் பன்னி அனுப்பிடுவானா”  என யோசித்துதான் பலரும் இணையத்தில் பொருள் வாங்குகிறோம் .
அமெரிக்காவின் மாபெரும் இணைய விற்பனை நிறுவனமான Amazon தமது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு பெரும் முயற்சியை எடுத்து வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள் வாங்கிய அதே நாளில் உங்களின் கைகளில் கொண்டு சேர்ப்பது தான் அது.
இதற்காக பெரும் சேமிப்பு கிடங்குகளை San Francisco, Nevada, Arizona பகுதிகளில் கட்டி வருகிறது.
Los Angeles, New Jersey, South Carolina, Tennessee & Virginia ஆகிய பகுதிகளிலும் கட்ட இருக்கிறது.
அதன் நோக்கம் என்னவென்றால், அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு சுமார் 85 மைல் தொலைவில் ஒரு கிடங்கு எனும் விகிதத்தில் அமைக்க உள்ளது. இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக மிக திருப்தி அளிக்கும் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது .
இந்தியாவில் நாம் வாங்கிய பொருள் வரும் வரை,  தேதி பார்த்து தவம் செய்வோம். இனி அமெரிக்கர்கள் சில மணி நேரங்களிலேயே வாங்கிய பொருளை கையில் அடைவர்.

வாழ்வா சாவா? தனது இறுதி ஆயுதத்துடன் நோக்கியா



இன்று அனைத்து கைபேசி கடைகளிலும் சாம்சங் விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன் நோக்கியா கைப்பேசியை தவிர வேறு எதையும் நாம் விரும்பி வாங்குவதில்லை.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கைபேசி சந்தையின் ராஜாவாக இருந்த நோக்கியா இப்போது 3 பில்லியன் யூரோ நட்டத்தில் உள்ளது. மேலும் 10000 பணியாளர்களையும் தூக்கியுள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணம் Android கைபேசிகளை அது வடிவமைக்காமல் தனது சொந்த கைபேசி இயக்கு தளம் Symbion கைபேசிகளை மட்டுமே அது விற்பனை செய்து வந்தது.  ஆனால் சாம்சங் நிறுவனம் Android ஐ தனது பல கைபேசிகளிலும் வைத்து விற்று லாபம் சம்பாதித்தது.
2007இல் Apple iPhone வந்த பின்னர் நோக்கியா பல சவால்களை சந்தித்தது. இப்போது முழுக்க முழுக்க Windows Phone இயக்கு தளத்தை மட்டுமே தனது கைபேசிகளில் பயன்படுத்த முடிவு செய்து Lumia கைபேசிகளை விற்பனை செய்து வருகிறது.
iPhone மற்றும் Android இயக்குதளங்களுக்கு ஒரு சரியான மாற்றாக உள்ள இந்த Windows Mobile 7.5 இயக்கு தளம் மெதுவாக வளர்ந்து வருகிறது. இப்போது புதிதாக Windows 8 இயக்கு தளத்தை தமது கணினி மற்றும் கைபேசி சாதனங்களில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது Microsoft. உலகில் விற்கப்படும் ஒவ்வொரு Android கைப்பேசிக்கும் Microsoft நிறுவனம் royalty மூலமாக பெரும் தொகையை Samsung, HTC நிறுவனங்களிடம் இருந்து பெறுகிறது. ஆனாலும் தனது சொந்த இயக்கு தளம் Windows Phone 7.5 & Windows Phone 8  வெற்றியடைய வேண்டும் என Microsoft பல முயற்சிகளை செய்கிறது.
உலக அளவில் உள்ள கைபேசி சந்தையில் 3.7%  மக்களால் மட்டுமே பயன்பாடில் உள்ள Windows Phone 7  (Android 68% , Apple 17%) 2013 இறுதிக்குள் 10 சதவீதமாக உயர வேண்டும் இல்லையென்றால் நோக்கியா தமது சொத்துக்களை விற்றுவிட வேண்டும் அல்லது தமது கம்பெனியையே விற்கும் சூழல் உருவாகி நோக்கியா அழிந்து விடும்.

Apple தொடுத்த பல வழக்குகளில் சிக்கி பல கோடி டாலர் அபராதம் செலுத்திய Samsung பெரும் சிக்கலில் உள்ளது.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி Androidக்கு மாற்றாக மக்கள் Windows Phone  வாங்க விரும்பலாம். மற்றும் புதிதாக வரவுள்ள iPhone 5க்கு போட்டியாக விலை மற்றும் தரத்தில் உறுதியாக புதிய Lumia உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Qualcomm Dual Core Processor
4.3 Inch Display with HIGH Resolution
Powerful cameras in both side
NFC Technology for Wireless payments
Skype calling
ஆகிய தொழில்நுட்ப வசதிகளுடன் iPhone5க்கு(அடுத்த மாதம் அறிமுகம்) போட்டியாக இந்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்கிறது   நோக்கியா.
பச்ச பொத்தான் – சிவப்பு பொத்தான் என எளிமையாக இருந்த காலத்தில் உள்ள மக்கள் இன்னும் Smart Phone னுக்கு மாறவில்லை.  Windows Phone எளிமை உணர்ந்து மக்கள் அதிகமாக Lumia கைபேசிகளை வாங்கினால் மட்டுமே நோக்கியாவை காப்பாற்ற முடியும்.

ஃபேஸ்புக்கில் உங்களை Tag செய்து இம்சை செய்கிறார்களா?


Power Starக்கு அடுத்த படியாக ஆனந்தத் தொல்லை தரும் உங்களின் Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் (கோர்த்து விடுவது) செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும்.
பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை இருக்கும்.
மேல் வலது மூலையில் இருக்கும் காவிழ்ந்த முக்கோணத்தை சொடுக்கவும்.
பின்னர் Privacy Settings எனும் தொடுப்பை சொடுக்கவும்.
பின்னர் பின் வரும் படிகளை செயல்படுதுங்கள்.
Step 1:
Step 2:

Step 3:

இப்போது எவரேனும் உங்களை Tag செய்தால் உங்களின் அனுமதி இல்லாமல் அது உங்களின் Profile Timelineஇல் தெரியாது.

மக்களை உளவு பார்க்கும் பேஸ்புக்; எதிர்க்கும் விக்கிபீடியா!


குற்றவாளிகளை கண்டுபிடிக்க முன்பெல்லாம் தொலைபேசியை ஒட்டுக் கேட்பார்கள். இப்போது அவர்கள் தங்களின் தொடர்பு தளங்களை மாற்றி வருவதால் அரசுகளும் புது முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இங்கிலாந்து அரசு கேட்டுக்கொண்ட ” இனி இங்கிலாந்தில் வாசிக்கும் விக்கி பயனாளார்கள் ஏதேனும் சந்தேகிக்கும் படியான பக்கங்களை (வெடி பொருட்களை செய்வது எப்படி, கொலை செய்வது, தற்கொலை) படித்தால் அவர் பற்றிய தகவல்கள் இனி இங்கிலாந்து காவல் துரைக்கு (துறைக்கு) தெரியப்படுத்த வேண்டும்”
எனும் விதியை  திரு. ஜிம்மி வெல்ஸ் (Wikipedia Fouder) அவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளார். நீங்கள் ஒரு வேளை கண்டிப்பாக எமது பயனாளார்கள் எந்தப் பக்கத்தை பார்க்கிறார்கள் என விரும்பி உங்களின் இணைய சேவை நிறுவனங்களுக்கு (ISPs like Airtel/BSNL in England) அழுத்தம் கொடுத்தால்; நான் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணர்களுக்கும் Encrypt செய்யப்பட்ட பக்கங்களை கொடுத்து உங்களின் ISP எவரும் பார்த்தால் Wikipedia.org என்று மட்டுமே தெரியும்., விளக்கமாக அது எந்தப் பக்கம் என தெரிய வராது. என இங்கிலாந்து அரசை எதிர்த்துள்ளார்.
இது மட்டுமல்ல., அமெரிக்கர்களின் Facebook Chat செய்திகளையும் அமெரிக்க அரசு உளவு பார்த்து வருகிறது. Facebook இல் இருக்கும் சிறார்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க.. எவரேனும் குறைந்த வயது கொண்ட ஆண் / பெண் பயனாளார்களிடம் தொடர்ந்து Chat செய்தால் அவர் பாலியல் குற்றவாளியாக இருக்கலாம் என அமெரிக்க அரசு சந்தேகிக்கிறது.

வரவிருக்கும் புதிய உளவு முறைகள்:
மின்னஞ்சல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட இருக்கின்றன.   உண்மையிலேயே குற்றவாளிகள் மட்டும் உளவு பார்க்கப்பட்டால் பரவா இல்லை.. அனைத்து அரசுகளும் அனைத்து மக்களின் நடவடிக்கைகளையும் உளவு பார்க்க விரும்புகின்றன.
ஒரு வேலை பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுமென்றால்., அவர்களுக்கு பாதுகாப்பு இருந்தும் பயனில்லை.

நம்மை அடிமைப்படுத்திய பரங்கியர் இப்போது Facebookஇன் அடிமைகள்.


Facebook பயன்படுத்தும் இங்கிலாந்து நாட்டவர்களில் ஒன்பதில் ஒருவர் தினமும் எட்டு மணிநேரம் Facebook தளத்தை பயன்படுத்துவதாகவும். சுமார் 20 முறையாவது தமது கணக்கை திறந்து பார்க்கிறார்கள் என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக பெண்கள், தங்களின் சக தோழிகள் தம்மை ஏளனம் செய்யும் வகையில் உள்ள புகைப்படங்களை வெளியிடுவது; தம் வாழ்வில் உள்ள கவலைகளில் மிக முக்கியமான கவலை எனத் தெரிவித்துள்ளனர்.
38 சதவீத இளம் பயணர்கள், தங்களை சம்பந்தம் இல்லாத புகைப்படங்களில் கோர்த்துவிடுவது (Photo Tagging) மிகவும் எரிச்சலடையச் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐந்தில் ஒருவர், தமது நிலைத் தகவல்கள் தமது வாழ்க்கை மிகவும் சந்தோசமாகவும் வசதியாகவும் இருப்பதாக கொஞ்சம் மிகைப்படுதியே பதிவுகள் போடுவதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.
நம்ம ஊர்ல இப்படி ஒரு ஆய்வு நடந்தால் என்ன மாதிரி முடிவுகள் வரும்?

Fake Facebook account will be Deleted soon...


Fake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன.

அடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர்.
சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில் இருந்து லைக் போட்டு, பின்னர் ஆகா ஓகோ என தம்மைத் தாமே புகழ்ந்து வருவர்.
ஆனால், சில வர்த்தக நிறுவனங்கள் தமக்கென ஒரு Facebook page வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு “Mannar & Co” . அவர்கள் ஒரு தொகையை மாதா மாதம் “Social Marketing” நிறுவனங்களுக்கு கொடுப்பர். இந்த Social marketing நிறுவனங்களின் வேலை என்னவென்றால், நமது மன்னார் பக்கத்தை பல மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை லைக் செய்ய வைப்பது தான்.
ஆனால், நாம் மன்னார் பக்கத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க மாட்டோம். எனவே அவர்கள்.. எங்களைப் போன்ற Web Development நிறுவனங்களை அணுகி ஒரு எந்திர நிரலை (Bot Script) எழுதச் சொல்வார்கள்.

இதன் வேலை, ஆயிரக் கணக்கான புதிய போலி கணக்குகளை நிமிடங்களில் உருவாக்கி; மன்னார் பக்கத்தில் சில ஆயிரம் லைக்குகள் கொடுப்பர். அது மட்டுமல்லாது பல Social Marketing நிறுவனங்களிடம் சென்று, நாங்கள் உங்களின் வாடிக்கையாளர் பக்கத்தில் ஒரு லட்சம் லைக் கொடுக்க இவ்வளவு பணம் தாருங்கள் என பேரம் பேசுவர்.
போலி கணக்குகள் பெரும்பாலும் உண்மையான மனிதரின் புகைப்படம் அல்லது அமலா பால் போன்ற படங்களே இருக்கும். அவர்களுக்கு நண்பர்களும் அதிகமாக இருக்க மாட்டார்கள்.
இது போன்ற போலி கணக்குகள் கொடுக்கும் லைக்; Facebookல் இருக்கும் பணம் கட்டி பக்கங்களையும் விளம்பரங்களையும் கொடுக்கும் நிறுவனங்களை அதிருப்தியில் ஆழ்த்ியுள்ளன.
எனவே., போலி கணக்குகளை முடக்க பல வழிகளை யோசித்து வருகிறது Facebook. அதன் முதல் படியாக, சந்தேகமுள்ள கணக்கு வைத்திருப்போர்க்கு தொலைபேசியில் அழைத்து அவர்களின் விவரங்களை சரி பார்க்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால், சில விசமிகள் சக பயனாளார்களுக்கு போன் போட்டு அவர்களை ஏமாற்றவும் செய்துவிடுவார்கள். எனவே Facebook மிகவும் எச்சரிக்கையாக இதை கையாளும் என நம்புவோம்.

Thursday, September 13, 2012

Satrumun Kidaitha Thagaval Padi-சற்றுமுன் கிடைத்த தகவல்படி...


Most Romantic Song.....


சற்றுமுன் கிடைத்த தகவல்படி

தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது  என்  இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

நிலை மாறாமல் 
தலை சாயாமல் 
அடி உனக்கே வாழ்ந்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

மாளிகையாய் மலர் மாளிகையாய்
உன் மனதினை அலங்கரிப்பேன்
தேவி உந்தன் கண்களில் 
நான் தினசரி அவதரிப்பேன்

தீவிரமாய் தினம் தீவிரமாய்
உன் தேடலை அனுமதிப்பேன்.
தீண்டும்போது நேர்ந்திடும் 
உன் தவறுகள் அனுசரிப்பேன்

முதல் நாள் எனை தீண்டினாய்
மறுனாள் எனை பூட்டினாய்
சங்கத் தமிழ் போல உன் மணம்
சங்கமிக்கும்போது சந்தனம்
இதழ் ஊராமல் இமை தேடாது
உன் நினைவால் நிலைத்திருப்பேன்....

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

யாத்திரைகள் என் யாத்திரைகள்
உன் விழிகளில் நிகழ்கிறதே...
ஆசை கேட்கும் கேள்விகள்
அட நண்பகள் குளிர்கிறதே...

ராத்திரிகள் என் ராத்திரிகள் 
மிக ரகசியம் ஆகிறதே
நாளும் பூக்கும் நாபகம் 
அட வன்முறை பேசியதே...

எதனால் இமை பார்த்தது
எதனால் இதழ் கோர்த்தது
வங்கக்கடல் ஈரம் போகுமா
இந்த புதிர் காதல் ஆகுமா....

இமை மூடாமல் 
இரை தேடாமல் 
உன் உணர்வால் விழித்திருப்பேன்...

சற்றுமுன் கிடைத்த தகவல்படி
தொலைந்துபோனது என் இதயமடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

உற்று பார்க்கும் விதம் புரிந்ததடி
இளமை சிறகடித்து பறந்ததடி
உயிரே என் உயிரே என் உயிரே உயிரே...

லால லால லலா லல லல லல்லா...
லால லால லலா லல லல லல்லா...
லலலா லல லலலா லல லலலா....

Actor    : Abbas
Actress : Nanditha
Singer   : Harish Ragavendra
Music    : Bharathan
Movie    : Sinthaamal Sitharaamal

Wednesday, September 5, 2012

கவிதை.....

கற்பனைகளை
கடன் வைத்துதான்
கவிதைகளை
வருவித்தேன் உனக்காக....
ஆனால்
அந்த கற்பனைக்கே
காதல் வந்துவிடும்
என் மீது
கண்ணே உனக்கு
மட்டும் ஏனடி
காதல் உன்
கற்பனைக்கும்
எட்டாத தொலைவில்...